வணக்கம் ! உலகத் தமிழ் நல்லுறவுகளே !
உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு (தை-1) நல் வாழ்த்துக்கள்!

.
உறவுகளே !  இணைய வழியூடாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.நாம் ” கல்வியும் தமிழர் தம் பொருண்மிய மேம்பாட்டுக் கட்டமைப்புமே தமிழர்களின் எதிர்கால அரசியல் வாழ்வியக்கத்தை நிலைநிறுத்தி நகர்த்திச் செல்லும்” எனும் அசைக்க முடியா நம்பிக்கையுடனும் துார நோக்குடனும் செயற்படும் தமிழர்சார் அமைப்பாகும்.வன்னி பெருநிலப்பரப்பின் முல்லைத்தீவை முதன்மைத் தளமாகக் கொண்டு இயங்குகின்றோம். எமது மக்கள் இழந்து நிற்கும் கல்வி - பொருளாதாரம்-  கலை கலாச்சார உயா் பண்பாட்டு விழுமியங்கள் இவற்றை மீளக் கட்டி எழுப்புவதே பிரதான இலக்கு. இதனை நாம் புலம்பெயா் மற்றும் உலகத் தமிழ் உறவுகளுடன் கரம்கோர்த்து நகா்த்திச் செல்வதே நோக்கு. அரசியல் - மதம்- சாதி  இவற்றைக்  முழுமையாகக் கடந்து வேலை செய்தல் செயற்திட்ட வரைபில் பிரதானமானதாகும்.
               .
                                    இதன் வழிகாட்டுத் தலைவா்களாக தங்களது பங்களிப்பையும் நல்க சமூக நலனிலும் சேவையிலும் அக்கறையுள்ள நல்லுள்ளங்களை  இருகரம் கூப்பி அன்புடன் அழைக்கின்றோம்-வரவேற்கின்றோம். நமது வீண் செலவுகளை அா்த்தமுள்ள செலவுகளாக மாற்றுவோம். நம் உறவுகளுக்கு கைகொடுப்போம். அவா்களை துாக்கி விடுவோம். தாயக கட்டுமான கனவை இவ்விதம் நனவாக்குவோம். அழகிய - வளம்மிக்க தேசமாக -மக்களாக அனைத்தையும் மாற்றியமைப்போம். ஒரு தேசிய இனத்தை அழிக்கப் பயன்படும் மிகப் பெரிய கொடிய ஆயுதம் ஒரு இனத்தின் அடையாளங்களான பொருண்மிய கட்டமைப்பை சிதைத்து, அதன் பொருளாதாரத்தை சரித்து விடுதல், கல்வியை மட்டுப்படுத்தி விடுதல், அதன் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து சீரழித்து விடுதலாகும். இதை நாம் முதலில் கருத்தில் கொள்வோமாயின், இதைத் தெளிவாகப் புரிந்து கொள்வோமாயின் இலக்கை அடைதல் என்பது இலகுவான ஒன்றாகவே  இருக்கும். வரலாறே எம் வழிகாட்டி எனக் கொள்வோமாக.
                               தொடர்ந்து நாம் ஒன்றிணைந்து பயணிப்போம். இல்லாமையையும் இயலாமையையும் எம்மக்கள் சமூகத்தினின்று துரத்தி விடுவோம். எம்முறவுகளை கடன் தொல்லைகளிலிருந்தும் வறுமையின் கோரப் பிடியின்றும் மீட்டெடுப்போம். உளள்தைக் கொடுத்து அவா்களையும் நமது நிலைக்கு- தரத்திற்கு கொண்டு வருவோம். நாமும் அவா்களுக்கு கடன் கொடாமல் உதவிடுவோம். 
                  குறிப்பாக இவ்வுலக வாழ்வினின்று விடைபெற்றுச் சென்ற-மறைந்த  உங்கள் உறவுகளின் நினைவாகவோ அல்லது உங்களது பிறந்த தினம் - திருமண நாள் - மற்றும் நிகழ்வுகளின் நினைவாக ஏழை மாணவா்களின் கல்விக்கோ அல்லது விதவைகளாக உள்ள சகோதரிகளின் குடும்பங்களுக்கோ உதவக் கூடியவா்கள் எம்முடன் தொடர்பு கொள்ள மறக்க வேண்டாம்.
                                           அன்புறவுகளே ! மற்றவர்களுடனும் எமது இலக்கையும் செயற்திட்டங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். குறிப்பாக உங்கள் விளம்பரங்களை எமது இணைய தளமூடாகக் குறைந்த செலவில் செய்யுங்கள். இதனால் கிடைக்கும் பணமும் ஏழை மாணவா்களின் கல்விக்கே செலவிடப்படும்..தமிழர் சமூக நலனில் அக்கறையுள்ளவா்களுக்காக அவா்களுக்கு உதவி செய்ய துார தேசத்திலிருந்து எதிர்பார்ப்போருக்காக இணைப்பை ஏற்படுத்தித் தர நாம் எப்பொழுதும் ஆயத்தமாகவேயுள்ளோம்.தொடர்ந்து இணைந்திருங்கள்....” நாளை நமதே”.!
.
தொடர்பு கொள்க .:.
Viber : 0094 76 73 79 273
முகநுால் : சமூக மேம்பாட்டு அமைப்பு