தமிழர் சமூக மேம்பாட்டு அமைப்பு
FEDERATION FOR  TAMIL  SOCIAL  DEVE
LOPMENT

.
01. கல்வி
02. பொருண்மிய மேம்பாடு

03. கலை  பண்பாட்டு   மேம்பாடு
.

    இழப்பை எண்ணி எண்ணியே சோர்வதும் இல்லை.!
வற்றை மறந்து அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்வதும் இல்லை..!
தனித்துவமிக்க எமது வரலாற்றை மீட்பதும் காப்பதும் எமது கடமை..!

.
முள்ளிவாய்க்கால்எனும் அவலத்தின் பின்பு எம்மக்கள் சந்தித்து வரும்  சொல்லொணா துயரங்களை தினந்தோறும் கண் முன்னே காண்கின்றோம்.நிதர்சனமாய் விரியும் அவற்றைக் காண்கின்ற போது இதயமே வெடித்துச் சிதறிவிடும் போலுள்ளது.உழைக்கும் திறனாளியை இழந்து, குடும்பப் பாரத்தைச் சுமக்கும் சகோதரிகளையும், யுத்தத்தின் நிமித்தம் அங்கங்களை இழந்து அங்கவீனமுற்ற சிறப்புத் தேவையுள்ளவர்களையும் இந்நிலையிலுள்ள முன்னாள் போராளிகளையும் மாவீரா் தம் பெற்றோரையும் அவா் மனைவியரையும் ஆதரவற்ற பிள்ளைகளையும் கண்ட போது , அப்பிள்ளைகள் தம் கல்வியை தொடர முடியாமல் கஸ்டப்படுவதையும் தமது அத்தியாவசிய தேவைகளை பூா்த்தி செய்ய முடியாத பொருளாதார அழுத்தம் கண்டு,   பெண்கள் பாதை மாறி பயணிப்பதையும் வாழ்க்கைக்கு நல்வழி காட்டுவாரின்றி அல்லல்படுவதையும் இன்றைய இளம் சமுதாயம் நெறி கெட்டு ஒழுக்கம் கெட்டு, எமது கலாச்சாரத்தையும் எமது உயரிய பண்பாட்டு விழுமியங்களையும் சிதைத்து சின்னாபின்னமாக்கி, அவற்றை தம்மையும் அறியாமல் அழித்திட, ஓரினத்தின் தனித்துவத்தை சிதைத்து, அவ்வினத்தின் தேசிய அம்சங்களையே அழித்திடக் காரணமாகி, வரலாற்றுத் தவறொன்றை இழைத்திட்ட குற்றவாளிகளாகும் நிலை கண்டும் நாம் ஒரு தெளிவான முடிவுக்கு வந்தோம். எம்மினத்தைக் காக்கும் பொறுப்பு நம்முடையது. இதை யாராவது செய்வார்கள் என்றோ அல்லது செய்யட்டும் என்றோ நாம் இருந்து விட முடியாது என்ற நிலைமையினை புரிந்து கொண்டு, ஒரு துார நோக்குப் பார்வையுடன் களமிறங்கினோம்.அதன் விளைவே ” தமிழர் பொருளாதார மேம்பாட்டு நிறுவனமாகிய ” தமிழர் சமூக மேம்பாட்டு அமைப்பு” ..அது பிரசவித்தவையே ” பெண்கள் தலைமைத்துவ மேம்பாட்டு அமைப்பு ” ”மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு அமைப்பு” மற்றும் ” நுட்பம் கல்வி  நிலையம்” ”முன்பள்ளி மேம்பாட்டு பிரிவு” சிறுவா் கழகம்” ”இளையோர் மேம்பாட்டு கழகம்” முதலானவை..எமது அடுத்த கட்ட வேலைத்திட்டம் ” தமிழர் கலைபண்பாட்டு கழகம்” 
                    ””””””””””””””””””’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

01. பெண்கள் தலைமைத்துவ மேம்பாட்டு அமைப்பு
02. மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு அமைப்பு.
03. நுட்பம் கல்வி சேவை
04. சிறுவா் கழகம்
05. இளையோர் மேம்பாட்டு கழகம்
06.தமிழர் கலை பண்பாட்டுக் கழகம்
.                                 ”””””””’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
 

 01. பெண்கள் தலைமைத்துவ மேம்பாட்டு அமைப்பு.
 
 

                                               யுத்தம் மற்றும் காரணங்களால் கணவனை (இறப்பு) இழந்த பெண்கள் ,கணவன் காணாமல் போகச் செய்யப்பட்ட குடும்பப் பெண்கள் , கணவன் ஊனமுற்ற நிலையில் குடும்பத்தை தலைமை தாங்கும் பெண்கள் பெற்றோரை- உழைக்கும்  திறனாளியை இழந்த நிலையில் குடும்பத்தை தலைமை தாங்கும் பெண் பிள்ளைகள்,,மற்றும் திருமண வயதைக் கடந்தும் திருமணமே ஆகாத நிலையில் உள்ள பெண்களுடன் , பல காரணங்களால் கணவனால் கைவிடப்பட்ட நிலையிலுள்ள  பெண்கள் .....முதலான இப்படிப்பட்டவர்களை  ”பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களாக இனங்கண்டு, அவா்கள் முகங்கொடுக்கும் சிக்கலான பிரச்சனைகளில் அவா்களிற்கு நோ்வழிகாட்டி, நெறிப்படுத்தி வழிகாட்டிச் செல்லவென இவ்வமைப்பு  ”சமூக மேம்பாட்டு அமைப்பினால்” கிராமங்கள் தோறும் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது. இவா்களில் மாவீரா்களின் அன்னையர்களும் மனைவியரும்   முன்னாள் பெண் போராளிகளும் அடங்குவா். இது வரையிலும் 14 கிராமங்களில் இவ்வமைப்பு ஆரம்பிக்கப்படடுள்ளது.( இன்று ,,சமூக ஒழுக்கத்திலும் பொருளாதார கட்டமைப்பிலும் இக்குடும்பங்களை வழிகாட்டிச் செல்லப் பல தேவைகள் உள்ளன. பல விதமான தொழில் முயற்சிகள் மற்றும் தொழில் பயிற்சிகளையும் வழங்க வேண்டியத் தேவைகள் நிறையவே உள்ளன. இக்குடும்பத்துப் பிள்ளைகளின் கல்விக்கான தேவைகளும் உள்ளன).  நிறைய பெண்கள் கடனாளிகளாக உள்ளார்கள். காரணம் பாதுகாப்பான வீடொன்றைக் கட்டிக் கொள்வதற்காக கடனைப் பெற்றுள்ளார்கள். நிம்மதியான வாழ்க்கை வாழ அடிப்படை தேவையான வீடும் அவசியம். ஆனால் அதைக் கட்டியும் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலையில் அம்மக்கள். மோட்டார் சைக்கிள் சத்தத்தைக் கேட்டதும் ஓடி ஒளியும் மக்களாகவுள்ளார்கள்..இன்னமும் கடனைத் திரும்பச் செலுத்த முயற்சிக்கின்றார்கள். முடியாமல் தவிக்கின்றார்கள். இந்த நிலையில் தமக்கு உதவும்படியே சுயதொழில் ஒன்றை மேற்கொள்ள உதவிகோரி நின்றார்கள். இவற்றில் முக்கியமாக கரு்த்தில் கொள்ளப்பட வேண்டியவா்களாக இவா்கள்  காணப்படுகின்றார்கள். 

02. . மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு அமைப்பு..

             பல காரணங்களால் ஊனமுற்ற உறவுகள் என்று கூறினாலும் யுத்தமே அடிப்படைக் காரணமென்றால் அது மிகையாகாது. முன்னாள் போராளிகளாக மற்றும் சின்னஞ் சிறார்களாக -முதியோர்களாக இவா்கள் காணப்படுகின்றார்கள். பெண்கள் -சிறார்கள் என்று இரங்காமலும் , முதியோர் என்று முகம்பாராமலும் கொடிய யுத்தம் ஊனமாக்கியோர் தொகை அதிகமே....இவா்களும் பல தேவைகளை எதிர்நோக்கிய வண்ணம் வாழ்வதா ? சாவதா? என்ற நிலையில், சமூகத்தோடு தம்மையும் இணைத்துக் கொள்ள முடியாமலும் சமூகத்தோடு தம்மையும் இணைத்துக் கொள்ள விரும்பாதவா்களாகவும் இவா்கள் காணப்படுகின்றார்கள். இவ்விதம் ஒதுங்கிஅ வாழ்ந்தோரை நோக்கி நகரும் முகமாக 2010ல் பயிற்சி பாசறை ஒன்றை நடாத்தி ”மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய புனருத்தாபனம்” என்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது..முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 30 போ் பயிற்சியினைப் பெற்றுத் தொண்டர்களாக தம்மையும் மாற்றிக் கொண்டார்கள். இதன் இணைப்பாளராக சாம் அவா்கள் நியமிக்கப்பட்டார்கள்.இந்த தொண்டர்களுக்கு எந்தவித உதவிகளும் வழங்கப்படவில்லை. வழங்கப்படுவதில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்திட்டத்தை வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்வதே மேற்படி அமைப்பின் பிரதான இலக்காகும்.
.
 
 
03. நுட்பம் கல்வி நிலையம்.
 
 

           தமிழ் மாணவா்கள் கல்வியில் உள்ள அதாவது தமிழ் மாணவா்கள் தமது கல்வியை தொடரவுள்ள தடைகளை இனங்கண்டு, அவற்றிற்கான மாற்றுத்தீர்வொன்றை ஆக்கபூர்வமாக முன்வைப்பதே 
இதன் பிரதான இலக்காகும். உயர்கல்விச் சேவையினை வழங்குதல், டிப்ளோமா பட்டப்படிப்புக்களை மே்ற்கொள்ளுதல், குறிப்பாக கணனி, தையல் கலை, முகாமைத்துவம், ஊடகத்துறை மற்றும் துறைகளுக்கான பட்டப்படிப்புக்களை மேற்கொள்ளுதல்.
                 அத்துடன்,மாலை நேரக்கல்வியினை கிராமங்கள் தோறும் ஆரம்பித்த்ல்,அதற்கான கல்வி நிலையங்களை ஆரம்பித்தல்,ஆசிரியா்களை நியமித்தலும் பொருத்தமான வேதனம் வழங்குதலும்.
                  அடுத்து, முன்பள்ளி மேம்பாட்டு பிரிவு ...சின்னஞ் சிறார்களின் அடிப்படைக் கல்விக்கான உதவிகளை வழங்குதல், இதற்கான முன்பள்ளிகளை அமைத்தல், ஆசிரியைகளின் மாதாந்த உதவித் தொகை, பிள்ளைகளிற்கான சீருடைகள் , பிள்ளைகளிற்கான சத்துணவு வழங்குதல், கற்றல் உபகரணங்களை வழங்குதல், விளையாட்டுப் போட்டிகளை நடாத்துதல், பரிசுப் பொருட்களை வழங்குதல் இப்படியாக இப்பணியினை சீரிய முறையில் மேற்கொள்ளுதல்.
.
04. சிறுவா் கழகம்.

           சிறுவா் கழகங்களை கிராம மட்டங்களில் ஆரம்பித்து, அச்சிறார்களை கல்வி - ஒழுக்கம் - ஆன்மீகம் இவற்றில் நடத்திச் செல்வதன் ஊடாக ஓர் ஆரோக்கிய சமூகத்தை உருவாக்குதல். இவர்களுக்கு விளையாட்டு ஆர்வத்தையும் கல்வி சேவையையும் வழங்குவதுடன் சத்துணவையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்..”இன்றைய சிறார்கள் நாளைய தலைவா்கள்”.
.
05. இளையோர் மேம்பாட்டுக் கழகம்.

                                 எதிர்காலத்தை ஒளிமயமாக்க வடிவமைக்க வேண்டியவா்களுக்கான வழிகாட்டல் வேலைத்திட்டம், சமூக ஒழுக்கச் சீர்கேடுகளிலிருந்து இவா்களை விடுவிக்க, கல்வி - விளையாட்டு- தொழில் பயிற்சி போன்ற  துறைகளில் இவா்களுக்கு நல்வழிகாட்டி இவா்களது எதிர்காலத்தை மேம்படுத்திச் செல்லுதல். இதற்காக கிராமங்கள் தோறும் ”இளையோர் கழகங்களை ஆரம்பித்தல்..
.
06.தமிழர் கலை பண்பாட்டுக் கழகம்.

                          தமிழ் தேசியத்தின் முக்கிய அடையாளமாகிய இவ்விடயத்தை நடைமுறையில் காண்பித்தல் - நிலைநாட்டுதல் . இதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுதல். தமிழினத்தின் உயரிய பண்பாட்டு விழுமியங்கள் அவனிக்கே முன்னுதாரணமான  ஒன்று..
    ” நாம் எமது இலக்கை உலகத் தமிழினத்துடன் கரம் கோரத்து 
 முன்னகர்த்துவதனுாடாக  சென்றடைவோம் -வென்றடைவோம்.”“
.
.
 ””கல்வியும் தமிழர் தம் பொருண்மிய மேம்பாட்டு கட்டமைப்புமே எம்மினத்தின் எதிர்கால அரசியல் வாழ்வியக்கத்தை நிலைநிறுத்தி நகர்த்திச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமும் எமக்கில்லை என்பது மட்டுமல்ல,   அதுவே எம் அசையா நம்பிக்கையுமாகும் ”..(சாம் M.A)